" I hate u " கார்த்திகாவிடமிருந்து
SmS. பதறாமல் ஆசுவாசமாக அவளுக்கு கால் செய்தேன். 5வது
முறையாக அழைத்தபோது "ம்ம் சொல்லுங்க சார், இன்னும் என்ன மறக்காம இருக்கீங்க போல?!" கேள்வியும்,கேலியுமாய் ஒரு பதில். இப்ப என்ன ஆச்சு? I hate u னு sms அனுப்பியிருக்க? என அவளிடம் கடிந்தகுரலில் பதிலுக்கு கேள்விகளை நான் அடுக்க எதிர் முனையில் அவளின் விசும்பல்...
சில நொடிகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டது !!
" இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா' தெருமுனை டீக்கடை ஸ்பீக்கரில் பாடல் அலறியபோது எனக்குள்
சிரித்தபடி நகர்ந்தேன்.ஆணிகள் அழைத்த காரணத்தால்!!
"வழக்கம் போல இன்னிக்கும் லேட்டாகிருச்சு. என்ன காரணம் சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிற தொணியில் கழுவி ஊத்த ஆயத்தமாக இருக்கும் டீம்லீடர எப்படி சமாளிக்கப்போறேனோ?
தெரியல.குலசாமிமேல பாரத்தப்
போட்டுரலாம் "னு எனக்குள்ளே
பேசிமுடிவெடுத்து கேபினுக்குள்
நுழைய முற்பட்ட போது," என்ன மா கண்ணா, லோ பேட்டரியான செல் மாதிரி மூஞ்சி டல்லா இருக்கு? எனி ப்ராப்ளம்? என மலர்விழி நக்கல் கலந்து விசாரிக்க
"ம்ம்ம். " என்றேன். சிரித்தவாறே
போ மகனே, நாட்டாமை உன்ன தான் தேடிட்டுருக்கார்னு சொல்லி
சிரிப்பைத்தொடர்ந்தாள் சிரிப்பழகி
மலர்விழி..
வெயிட்,வெயிட் நீயாரு? மலர்விழியாரு? கார்த்திகா யாரு?
என்ன சொல்ல வர்ற? னு கேட்பீங்க
தானே?..
என் பேரு கண்ணன். சங்கத்தமிழை சங்கறுத்த தமிழ் மண்ணின் மைந்தன்.(அட நம்ம மதுரைங்க) பொழப்புக்காக நல்லவன்
வேஷம் கட்ட வந்த இடம் சென்னை. பேஸிக்கலி
நான் ரொம்ப நல்லவன். நல்ல வேளையா இப்போ என் பக்கத்துல மலர்விழி இல்ல. இல்லாங்காட்டினா நான் நல்லவன் னு சொன்ன அடுத்த நிமிஷமே துப்பியிருப்பா.. திருவள்ளுவர் கூட
ஒரே ஒரு குறள்ல தான் அதிகமா துப்பியிருக்காரு. இவ என்னைய துப்பாத நாளே கிடையாது.ஆனாலும் அவகிட்ட இதுவரை கோபப்பட்டதில்ல. ரொம்ப திறமையானவ, அன்பானவ, என்னவிட ரொம்ம்ம்பப நல்லவ..
மலர்விழி பத்தி சிம்பிளா சொல்லனும்னா அவ சத்யராஜ்
மாதிரி. அவ கேரக்டர புரிஞ்சிக்கவே
முடியாது,வில்லத்தனமான ஹீரோயிசம் தான் அவளோட ஸ்டைல். கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும் னு சொல்லுவாய்ங்க. அந்த வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவள். என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்கிற முதல் பொண்ணும் இவ தான். எல்லோரும் அவகிட்ட உண்மையா நடந்துக்கனும் னு நினைப்பா.. இதுதான் அவளோட ப்ளஸ், மைனஸூம் அதேதான்..
கார்த்திகாவை பத்தி தலைவன் டிஆர் ஸ்டைல்ல சொல்லிறலாம்
'அவ ஈபிள் டவரு, நானோ குட்டிச்சுவரு!'100% பெர்பெக்ட்டா இருக்கனும் னு நினைக்கிற கேரக்டர். 1% கூட பெர்பெக்டா இருக்க முடியாத கேரக்டர் நான்.
இதுபோதாதா? லவ் ஆகிருச்சு.ஒரே ஆபீஸ்ல வேற வேற டீம்ல ஒர்க் பண்ற எங்களுக்குள்ள தினமும் சண்டைதான். ஆனாலும் இதுவரை ஈகோ ப்ராப்ளம் வந்ததில்ல. இன்னைக்குதான் முதன்முதலா அவகிட்ட கோபமா பேசிஇருக்கேன்!!
லன்ஞ்ச் டைம்ல அவளா என்கிட்ட பேசிடுவா என்ற தைரியத்தில் வேலைகளைத்தொடர்ந்தேன்.. லன்ச் டைம் தாண்டியும் இருவரும்
பேசிக்கொள்ளவில்லை மனசு உறுத்துவது போலொரு பிரம்மை .
சலனத்தோடுநிமிடங்களை நகர்த்திக்கொண்டிருந்தேன்..
என்ன பிரச்சினை டா? நான் அவகிட்ட பேசி பார்க்கவா? மலர்விழி என்னிடம் வந்து கேட்ட போது சந்தோஷமாக இருந்தது. அதை வெளிக்காட்டிக்காம "நீசகுனியோட லேடி வெர்ஷனாச்சே அதான் கொஞ்சம் பயமா இருக்கு"வென கலாய்த்த போது கொடூரமா ஒருலுக் விட்டு
வழக்கம் போல துப்பிட்டு,கார்த்திகா
இருக்கும் கேபினுக்குள் நுழைந்தாள்.
அவளோ அனுஉலை,இவளோ எரிமலை, நடுவுல சிக்கின என் நிலை? னு என் புத்திக்குள்ள டிஆர் டன்டனக்கா மியூசிக் போட்டாப்ல.
உடனே மலர்விழிக்கு sms அனுப்பினேன்,"தாயே,என் லவ்க்கு சங்கு ஊதிடாத"னு;"ச்சே..உனக்கெல்லாம் அப்டி பண்ணுவேனா? நண்பேன்டா நீ" என எகத்தாளமாய் பதில் அனுப்பினது அந்த பக்கி. இருந்தாலும் பயம் லைட்டா என்னையே சுத்திட்டு இருந்திச்சு.
" இப்போ கால் பண்றேன்,அவகிட்ட நான் பேசுறத நீ கேட்டுத்தொலை,
பழகின பாவத்துக்கு என்ன வேலைலாம் பாக்க வேண்டியிருக்கு கெரகம்டா" என மலரிடமிருந்து sms. "கடவுள் இருக்கான்டா கண்ணா " என எனக்குள் சொல்லியபடி அவர்களது உரையாடலை நேரலையில் கேட்க ஆயத்தமானேன்
(பன்றதெல்லாம் மொள்ள மாரித்தனம்,இதுல உரையாடல்,நேரலை னு தமிழ் பண்டிட் மாதிரி சீன் ஒரு கேடா? இது self த்தூ ,
"என்ன கார்த்தி உனக்கும் கண்ணனுக்கும்,மேரேஜ் னு கேள்விப்பட்டேன் உண்மையா செல்லம்? " மலரின் கேள்வியில்
கடுப்பாகி"அதெப்டி அவனோட
ப்ரண்ட்ஸ் எல்லோரும் அகராதியாவே பேசறீங்க? கார்த்திகா கொதிக்கத்தொடங்கினாள்
"அடிப்பாவி ஆரம்பத்திலேயே ஆட்டம் பாம் வெக்கிறீயே? " இது என்னோட மைன்ட் வாய்ஸ்.
cool cool நான் நேரா விஷயத்துக்கு வர்றேன்," அவனுக்கும்,உனக்கும் என்ன ப்ராப்ளம்? அவன் மூஞ்சிய பாரு, இவ்ளோ டல்லா இருந்ததே இல்ல,பேசி சால்வ் பண்ண முடியாத ப்ராப்ளம் னு ஒன்னும் இல்ல மா புரிஞ்சுக்கோ" வென தன்மையான குரலில் மலர் பேசினாள்," புரிதல் இருக்குமா;அவன் கிட்ட நேத்து ஈவினிங் பேசறப்போ நாம சேரமுடியாம போனா என்ன பண்ணுவ?" னு கேட்டேன் , உடனே யோசிக்காம வேற பொண்ண கரெக்ட் பண்ணிட்டு போய்டுவேன் னு சிரிக்கிறான், அப்போ என் மேல உண்மையான லவ் இல்ல னு தானே அர்த்தம்? கேள்வி கலந்த குரலில் விசும்பினாள் கார்த்திகா.!!
" அட லூசு இதெல்லாம் ஒரு ப்ராப்ளமா? அவன் ப்ராக்டிக்கலான விசயத்த சொல்லிருக்கான், காதலிக்கிறவரை புத்தியா இருந்திட்டு இப்போ இப்டி தத்தியா நிக்கிறீயே கார்த்தி,"ஒன்னு மட்டும்
தெளிவா புரிஞ்சிக்கோ, பொண்ணுங்க அளவு பசங்களால
பெர்பெக்ட்டா இருக்க முடியாது,
அதுபிறவிக்கோளாறு."பொதுவா
நம்மகிட்ட க்ளோஸா பழகுற பசங்க மேல ஒரு வித டவுட் வந்துட்டே இருக்கும்,எப்போ ப்ரொப்போஸ் பண்ணிடுவாங்களோ?னு பட் இவன் என் கிட்ட பழகத்தொடங்கி
பல வருஷமாச்சு,ஒருமுறைகூட
டவுட் வந்ததில்ல,அவனிடம் சில
குறைகள் இருக்கு,ஆனால் நல்லவன், அவன் உன்ன லவ் பண்ற விஷயத்த உன்கிட்ட சொல்றதுக்கு முன்ன என்கிட்டதான் சொன்னான்,
அவனோட குறைகள் என்ன னு பார்க்காம அப்டியே அவன ஏற்றுக்க கத்துக்கோ காதல் வாழ்க்கை அழகா இருக்கும், எனக்கும் எல்லோரயும்
போல லவ் பண்ண ஆசைதான்,பட் என் அப்பா,அம்மாவோட அன்புக்கு
முன்னால காதல் பெருசா தெரியல,
உன்னோட பிடிவாதத்தால ஒரு நல்ல மனசோட அன்ப இழந்திடாத
இது அட்வைஸ் இல்ல;அவன் மேல இருக்கிற நம்பிக்கைலதான்
உன்கிட்ட பேச வந்தேன்.தவறா இருந்தா sorry. என மலர் பேசி முடித்தாள். சிறிது மௌனத்திற்கு பின்,.. "ச்சே ச்சே தவறுக்கு இடமில்ல. நமக்குள்ள sorry சொல்லிக்கனுமா? அவனபத்தி பேசி எனக்கு சில விஷயங்கள் புரிய வெச்சிட்ட Thanks மா" என சமாதானமான குரலில் பேசினாள் கார்த்திகா.!!
"அகெய்ன் sorry மா நாம இவ்ளோ நேரம் பேசின விஷயத்த எல்லாம் அவனும் கேட்டுட்டுதான் இருந்தான், அவனுக்காக அந்த பாவத்தையும் நானே பண்ணிட்டேன்"என பினிஷிங் டச் கொடுத்து மலர்விழி வில்லத்தனத்தை காட்டிசிரிச்சு கவுத்துட்டா.
ம்.. "உன் மொபைல் ஆன் ல இருக்கு னு தெரியாத அளவு நான் தத்தி இல்ல,நீ கட் பண்ணு நான் கால் பண்றேன் " என கார்த்திகா
சொன்ன போது எனக்கு கண்ண கட்டிச்சு.
அடுத்த சிலநிமிஷங்களிலேயே
"எமன் காலிங்" கார்த்திகாவோட
மொபைல் நம்பர அப்டிதான் Save பண்ணிருக்கேன், "சொல்லுங்க மேம், எனி ப்ராப்ளம் ? என் கேபினுக்கு உடனே வாங்க சார்"
கார்த்திகாவின் குரலில் குறும்பு கொப்பளித்தது," இல்ல மேம் ஒரு சின்ன ஒர்க் இருக்கு " வென நான் கடமை உணர்ச்சியா பேசின போது
" த்தூ வாடா டேய், உனக்கு அவ்ளோதான் மரியாதை " இடையே மலரின் குரல், !!
பவ்யமா கார்த்திகாவோட கேபினுக்குள் நுழைந்து கண்ணுல நன்றிய தேக்கி வெச்சினு மலர்விழிய பார்த்தேன்," த்தூ உன் சென்டிமென்ட் பருப்பெல்லாம் இங்க பாயில் ஆகாது " ன்ற மாதிரி
ஒரு லுக் விட்டு" அவன் மொபைல் ல சிரிப்பழகி னு ஒரு கான்டக்ட் நம்பர் இருக்கு,அந்த நம்பருக்கு அடிக்கடி கால் பண்ணி பேசறான்,sms அனுப்பறான், யாரு அது னு கேளு கார்த்தி? என கோர்த்து விட்டு நமட்டுச்சிரிப்பை உதிர்த்தாள் மலர்...
" யாரு சிரிப்பழகி? அந்த நம்பருக்கு
என் முன்ன கால் பண்ணு" குரலுயர்த்தினாள் கார்த்திகா..
"நீயே கால் பண்ணி பேசு ; பட் கோபப்படாம நிதானமா பேசு" என மொபைலை அவளிடம் கொடுத்து
விட்டு,சிரிப்பை அடக்கி அமைதியாக நின்றேன்.
அவள் கால் பண்ணியதும்," பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை; ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை"
என மலரின் ஃபோனில் ரிங்டோன் ஒலிக்க சத்தமாய் சிரித்து விட்டோம் நானும் மலரும்,,
பொய்யான கோபத்தில் மறுபடியும்
I hate u என்றாள். " நீ வாடா கண்ணா,இவள விட அழகா வேற பொண்ண பார்த்து கரெக்ட் பண்ணிக்கலாம்" கிடைத்த கேப்பில் கலாய்த்த மலரிடம் " உன் கால் ல விழுறேன் இடத்த காலி பண்ணு தாயி" என கும்பிட்ட போது போங்கடா நீங்களும் உங்க காதலும் " உருப்படவே மாட்டீங்கடா வென செல்லமாய் சபித்து நகர்ந்தாள்..
U hate me கார்த்தி? ம்
ம் but I love u என்றேன்...
தழுக்கெனச் சிரித்து செல்லமாக என் தலையில் குட்டி,sorry
டா என்றாள் ,,,,,,,, ம் ம் ம்
- பாலா.