ஞாயிறு, 3 நவம்பர், 2013

உயிரெழுத்து !

அருகில் வா..
ஆறத் தழுவு..
இமைகள் மூடு..
ஈரிதழ் புசி..
உடல் பற்று..
ஊடல் கொள்..
என்னிலடங்கு..
ஏகத்திற்கும் ரசி..
ஐயம் கொல்..
ஒத்திகை புனை..
ஓரங்கமாவோம்..
ஒள அளவுதான் காமம்..
(அ) ஃ தல்ல காதல் !

4 கருத்துகள்: